கல்பாக்கம் அருகே போக்குவரத்து பாதிப்பால் வார சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
கல்பாக்கம் அருகே பவுஞ்சூர் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் வேறு இடத்திற்கு வார சந்தையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்பாக்கம்,
கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் சந்தை உள்ளது.
இதன் அருகில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அணைக்கட்டு போலீஸ் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
புதன்கிழமை தோறும் கூடும் இந்த சந்தை கடலூர்-மதுராந்தகம் நெடுஞ்சாலையில் உள்ளது. வாரந்தோறும் பவுஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருவாதூர், விழுதமங்கலம், சீவாடி, புன்னமை, நெல்வாய், லத்தூர், பெரியவெளிக்காடு, கடுகுப்பட்டு, பாலூர், பச்சம்பாக்கம், ஆக்கிணாம்பட்டு, கொடூர் உள்பட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
மிக குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் இந்த சந்தையில் காய்கறி, பழங்கள், மீன் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் போதிய இடம் இல்லாததால் சாலையோரத்தில் இருபுறமும் தங்கள் பொருட் களை வைத்தும், வேன் போன்ற வாகனங்களில் வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அந்த நாட்களில் கடலூர்-மதுராந்தகம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்பட வாகனங்கள் அந்த பகுதியை கடக்க முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்த சந்தை இருப்பதால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உரிய மருத்துவம் அளிக்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே சந்தை உள்ளதால் பொருட்களை வாங்க வருபவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள், கார் போன்றவற்றை அரசு ஆஸ்பத்திரியின் பிரதான வாயிலில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால் விபத்து போன்ற அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் ஆஸ்பத்திரிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது. காய்கறி கழிவுகளையும் ஆஸ்பத்திரி அருகே விட்டு செல்கின்றனர்.
விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள பெரிய பரப்பளவு உள்ள இடத்திற்கு இந்த வார சந்தையை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story