உடுமலை நகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க ரூ.30 லட்சத்தில் நவீன லாரி
உடுமலை நகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க ரூ.30 லட்சத்தில் நவீன லாரி வாங்கப்பட்டுள்ளது.
உடுமலை,
உடுமலை நகராட்சி பகுதி 7.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் துப்புரவு பணியாளர்களால் வீடு வீடாக சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கு சாலை ஓரம் வைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் பின் என்ற குப்பை தொட்டியில் போடப்பட்டு பின்னர் அந்த தொட்டி அப்படியே குப்பை லாரிகளில் ஏற்றி, பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கிற்கு (குப்பை கிடங்கு) கொண்டு செல்லப்படும்.
அங்கு குப்பைகள் கொட்டப்பட்ட பின்னர் அந்த தொட்டி அதே லாரியின் மூலம் எடுத்த இடத்திற்கே மீண்டும் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த பேவர் பிளாக் பின் தொட்டிகள் தேவையான அளவிற்கு இல்லாததால் பல இடங்களில் குப்பைகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதைத்தொடர்ந்து நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரித்து எடுத்து செல்லும் பொருட்டு ஆங்காங்கு வைக்கப்பதற்காக 2016-2017 தூய்மை இந்தியா திட்டத்தில் சக்கரத்துடன் கூடிய கம்பேக்டர் பின் என்ற 40 ஸ்டீல் குப்பை தொட்டிகளை உடுமலை நகராட்சி வாங்கி யது. இந்த குப்பை தொட்டிகள் கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம் 24-ந்தேதி உடுமலை நகராட்சிக்கு வந்து சேர்ந்தன. அவை சார்தார் வீதியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக அளவு குப்பைகளை கொண்டு செல்லும் வகையில் கம்பேக்டர் லாரி என்ற நவீன லாரிக்காக கடந்த 7 மாதங்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த லாரி வந்தால்தான் கம்பேக்டர் பின் என்ற குட்டை தொட்டிகளைத்தான் பயன்படுத்த முடியும் என்பதால் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இந்த நவீன லாரியில் கொட்டப்படும் குப்பைகள் அந்த லாரியில் உள்ள நவீன கருவியால் இறுக்கப்படும். அதனால் அதிக அளவில் குப்பைகளை எடுத்து செல்ல முடியும். ரூ.30 லட்சம் மதிப்புள்ள இந்த நவீன லாரி நேற்று முன்தினம் உடுமலை நகராட்சிக்கு வந்து சேர்ந்தது.
இதைத்தொடர்ந்து இந்த நவீன வசதிகளை கொண்ட கம்பேக்டர் லாரி மற்றும் கம்பேக்டர் பின் குப்பைத்தொட்டிகள் ஆகியவை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நகராட்சி ஆணையாளர் (கூடுதல் பொறுப்பு) என்ஜினீயர் தங்கராஜ் தெரிவித்தார்.

Related Tags :
Next Story