மாநில அரசை தரக்குறைவாக பேசுவதுடன் ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவது சரியல்ல சித்தராமையா பேட்டி


மாநில அரசை தரக்குறைவாக பேசுவதுடன் ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவது சரியல்ல சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 1 March 2018 3:16 AM IST (Updated: 1 March 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசை தரக்குறைவாக பேசுவதுடன், ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவது சரியல்ல என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

மாநில அரசை தரக்குறைவாக பேசுவதுடன், ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவது சரியல்ல என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பிரதமர் குற்றச்சாட்டு

கர்நாடக அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், 10 சதவீத கமிஷன் பெற்று வருவதாகவும், பணம் கொடுக்காவிட்டால் எந்த வேலையும் நடக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இதுகுறித்து கொப்பலில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு ஆதரவாக...

காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாகவும், 10 சதவீத கமிஷன் பெறுவதாகவும் பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவது சரியல்ல. ஒரு மாநில அரசு மீது குற்றச்சாட்டு கூறும் போது, அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அப்படி ஆதாரத்துடன் குற்றச்சாட்டை கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரசு மீது பிரதமர் கூறும் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கர்நாடகத்திற்கு 3 முறை வந்துள்ள பிரதமர், இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை.

பிரதமர் பதவியில் இருந்து கொண்டு மாநில அரசை தரக்குறைவாக பேசுவது, அந்த பதவிக்கே அழகில்லை. லலித் மோடி, விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. கர்நாடக அரசிடம் அமித்ஷா அடிக்கடி கணக்கு கேட்டு வருகிறார். காநாடக மக்கள் கணக்கு கேட்டால், அது அவர்களது உரிமை. அவர்களுக்கு கணக்கு சொல்ல தயாராக உள்ளேன். அமித்ஷாவுக்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story