கடலூரில் அனைத்து துறை பணியாளர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கடலூரில் அனைத்து துறை பணியாளர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் (ஜாக்-ஜியோ) கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வநாதன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் நல்லதம்பி, அரசு பணி ஓய்வு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜயபாண்டியன், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தன், சாலை பணியாளர் சங்க துணை தலைவர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தென்னரசு, செல்வராசு, தவமணி உள்பட கூட்டுக்குழுவினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார். முன்னதாக தர்ணா போராட்டம் நடத்த போவதாக கூட்டுக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story