மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; சர்க்கரை ஆலை ஊழியர்–முதியவர் பலி
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சர்க்கரை ஆலை ஊழியர்–முதியவர் பரிதாபமாக இறந்தனர். மகன் திருமணத்திற்காக பெண் பார்க்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த நாகப்பஉடையான்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(வயது 50). இவர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலையில் தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக, சென்னம்பட்டியை சேர்ந்த தவமணியை(65) தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டினார்.
வல்லம் அருகே உள்ள குரும்பூண்டிக்கு சென்று விட்டு பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பினர். அப்போது தவமணியை சென்னம்பட்டியில் இறக்கி விட்டு விட்டு சரவணன் தனது வீட்டிற்கு செல்ல முடிவு செய்து சென்றார். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், தஞ்சையை அடுத்த வல்லம் முன்னையம்பட்டி பிரிவு சாலையில் சென்றது.
அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணனும், தவமணியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்தை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோரும் பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய வேகத்தில் நிற்காமல் சென்றது. அப்போது லாரியின் முன்பக்க டயரில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளை, லாரி இழுத்துக்கொண்டே சென்றது. சாலையில் உரசிக்கொண்டே சென்றதால் திடீரென மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்தது. இந்த தீ மள, மளவென பற்றி லாரியிலும் பிடித்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ மள, மளவென பரவியது. அதற்குள் தஞ்சையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பகுதியும், மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது.

Related Tags :
Next Story