கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவர் பலி


கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவர் பலி
x
தினத்தந்தி 2 March 2018 4:00 AM IST (Updated: 2 March 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது மோட்டார் சைக்கிள் கல் மீது மோதி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கமுதி,

கமுதி கண்ணார்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவருடைய மகன் அருண்பாண்டி (வயது16). கமுதி சத்திரிய நாடார் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் நல்லமருது மகன் நவீன்குமார் (16). முதல்நாடு ஊரை சேர்ந்த லில்வலிங்கம் மகன் நம்புமணி (16). அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சோடனேந்தலை சேர்ந்த அய்யனார் மகன் கற்கடராஜா (18). ஜே.சி.பி. எந்திர கிளனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள்.

இந்நிலையில் அருண்பாண்டியின் புதிய மோட்டார் சைக்கிளில் 4 பேரும் கமுதி அருகே உள்ள கண்மாயில் குளிக்க சென்றனர். அப்போது அய்யனார் கோவில் வளைவு சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த கல் மீது மோதியது. இதில் கீழே விழுந்து 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே அருண்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, யாசர் மவுலானா மற்றும் போலீசார் விரைந்து சென்று அருண்பாண்டியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யனார் கோவில் சாலை வளைவில் அடிக்கடி விபத்து நடப்பதால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Next Story