விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்
விழுப்புரம்- கடலூர் மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப் படும் என்று புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த வி.பாலகிருஷ்ணன், மேற்படிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார். அவருக்கு பதிலாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக இருக்கும் தேன்மொழி, கூடுதல் பொறுப்பாக விழுப்புரம் சரகத்தையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றி வந்த சந்தோஷ்குமார் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
விழுப்புரம் சரகத்தில் 27-வது டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற சந்தோஷ்குமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் இதுவரை தெற்கு, மேற்கு, மத்திய மண்டலங்களில் பணியாற்றி உள்ளேன். தற்போது தான் முதல் முறையாக வடக்கு மண்டலத்தில் பணிபுரிகிறேன். வெவ்வேறு பணி காரணமாக விழுப்புரம் வழியாக சென்றுள்ளேன். அப்போது இந்த மாவட்டத்தை பற்றிய சிறு அறிமுகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று.
விழுப்புரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை தீர்க்க போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும்.
தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்- ஒழுங்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பிரச்சினைகள் குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூரை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள் கிடையாது. அந்த மாவட்டம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது உடனுக்குடன் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும்.
அதே நேரத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் 04146-223620 என்ற தொலைபேசி எண்ணில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதவிர 94454 62832 என்ற செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சொந்த ஊராகும். எம்.ஏ. வரலாறு படித்துள்ள இவர், கடந்த 2002-ல் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று கோயம்புத்தூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கான பயிற்சியை பெற்றார். இந்த பயிற்சி முடிந்து முதன் முதலாக திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 2004-ல் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடர்ந்தார். பின்னர் 2006-ல் பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, சென்னை வடக்கு போக்குவரத்து பிரிவில் துணை கமிஷனராகவும், கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரியாகவும், அதன் பிறகு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை மாதவரத்தில் துணை கமிஷனராகவும், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனராகவும் பணியாற்றினார்.
பின்னர் 2014-ல் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், கமாண்டோ பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய இவர் 2016-ல் பதவி உயர்வு பெற்று சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டியின்போது விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Tags :
Next Story