கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,


தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.வரதராஜன், நிர்வாகி ஜோசப்ராஜ், சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஜேம்ஸ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் தியாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் ஜான்சன், பட்டதாரி அணி தலைவர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்தும், அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.


Next Story