நெல்லை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா


நெல்லை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 2 March 2018 2:45 AM IST (Updated: 2 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நெல்லை மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. வள்ளியூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் நீதிமன்றம் அருகில், பஸ் டெப்போ அருகில், மடப்புரம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் நெல்லை மாவட்ட பொருளாளரும், வள்ளியூர் ஒன்றிய செயலாளருமான ஞானதிரவியம் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மேலும் 65 பேருக்கு வேட்டி-சேலைகளையும் வழங்கினார். பின்னர் வள்ளியூர்-ஏர்வாடி மெயின்ரோட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பணகுடியில் நகர மற்றும் இளைஞரணி சார்பில் பஸ் நிலையம் முன்பு கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னை தெரசா உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தென்காசி நகர தி.மு.க. சார்பில் காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. இதில் நகர அவை தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்- செங்கோட்டை


சங்கரன்கோவிலில் நகர இளைஞரணி சார்பில் பரிபவுல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு நகர செயலாளர் ரகீம் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கு பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போ முன்பு கட்சி கொடியேற்றப்பட்டது.

மானூர் மெயின் பஜாரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

திசையன்விளையில் நடந்த விழாவில், ராதாபுரம் யூனியன் முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில், 65 கிலோ ‘கேக்‘ வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து திசையன்விளை சாந்தி மருத்துவமனையில் நேற்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அவர் வழங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story