காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
நாகப்பட்டினம்,
நாகை அவுரித்திடலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சமூக நீதி மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமை தாங்கினார். இதில் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திரைப்பட நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ., தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது தமிமுன்அன்சாரி பேசும்போது கூறியதாவது:-
மனிதநேய ஜனநாயக கட்சி சாதிமத பேதமின்றி மதநல்லிணக்க உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. நாகை தொகுதியில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். நாகையை அடுத்த காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனை கண்டித்து வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றுத்திரட்டி கருப்புக்கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தடுத்து நிறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவரது 9 வயது சகோதரனும் கொல்லப்பட்டுள்ளார். இது நடந்து 6 நாட்களுக்கு மேல் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர்கள் தாஜுதீன், ராசுதீன், மாநில விவசாய அணி செயலாளர் முபாரக், மீனவர் அணி செயலாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவுரித்திடலில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடியேற்றப்பட்டது.

Related Tags :
Next Story