இருசக்கர வாகன விபத்தில் 120 பேர் உயிரிழப்பு
கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த 330 சாலை விபத்துக்களில் 120 பேர் இருசக்கர வாகன விபத்துக்களால் இறந்துள்ளனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் கூறினார்.
விருதுநகர்,
சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராம்குமார் தலைமை தாங்கினார். இந்த முகாமில் கலந்து கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 330 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகன விபத்துக்கள் மூலம் 120 பேர் இறந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வதால் தான் தலையில் அடிப்பட்டு இறந்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்வதுடன் சாலை விதிகளையும் பின்பற்ற வேண்டும். விபத்தில் சிக்கும் கார்கள், வேன்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகனம் வைத்திருக்கும் பலர் உரிமம் இல்லாமலும், காப்பீடு செய்யாமலும் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக ஆக்குவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
கருத்தரங்கில் மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் பேசும்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஒரு மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், அதனால் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ளவர்கள் தாமதிக்காமல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். வட்டார போக்குவரத்து அதிகாரி நடராஜன் பேசுகையில், வாகனம் ஓட்டுபவர்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை புரிந்து கொண்டும், சாலை விதிகளை மதித்தும் வாகனங்களை ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று கூறினார். முன்னதாக சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம் வரவேற்றார். முடிவில் கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story