கோவில் கும்பாபிஷேகத்தின்போது பெண்களிடம் நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது
காங்கேயம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை திருடிய வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கீரனூரில் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ந்தேதி நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனால் விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி 8 பெண்களிடம் 32 பவுன் நகை திருட்டுப்போனது.
இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நகையை பறிகொடுத்த 8 பெண்களும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிபாலகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், நகை திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காங்கேயம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 2 பெண்கள் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் பரமத்திவேலூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி சாந்தி (வயது 40) மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி லட்சுமி (23) என்றும், கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகையை திருடியவர்கள் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தி மற்றும் லட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 32 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி ஊராட்சியில் உள்ள மகரந்தம்பாளையம் கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நோட்டீசு இருப்பதும் தெரியவந்தது. அந்த நோட்டீசையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த 2 பெண்களும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களுக்கு ஒரு நாளுக்கு முன்பாக சென்று அந்த ஊரில் தங்கிக்கொள்வதாகவும், பின்னர் திட்டமிட்டபடி கூட்டத்திற்குள் புகுந்து பெண்களிடம் நகையை திருடி அங்கிருந்து தப்பி சென்று விடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகையை திருடிய வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story