காமராஜ் கல்லூரியில் ராணுவ சிறப்பு தபால் தலை கண்காட்சி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ராணுவ சிறப்பு தபால் தலை கண்காட்சி நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ராணுவ சிறப்பு தபால் தலை கண்காட்சி நடந்தது.
முப்பெரும் விழா
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று, இந்திய ராணுவ அஞ்சல் சேவை துறையின் 47-வது ஆண்டு விழா, கருத்தரங்கம் மற்றும் ராணுவ சிறப்பு தபால் தலை கண்காட்சி என முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டார். அவர், கல்லூரி மாணவர்களை ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யும்மாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, ராணுவத்தில் அதிகாரிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு முறைகள் பற்றி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கம் நடந்தது. அந்த கருத்தரங்கில் விமானப்படை ஓய்வுபெற்ற கமாண்டர் ராஜகோபால், ராணுவத்தில் அதிகாரிகள் தேர்வு முறை பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
கண்காட்சி
அதனை தொடர்ந்து கல்லூரியில், ராணுவ தபால் தலைகள், சிறப்பு தபால் உறைகள் கண்காட்சி நடந்தது. அந்த கண்காட்சியை தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் திறந்து வைத்து பார்வையிட்டார். கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு தபால் உறைகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஓய்வுபெற்ற கர்னல் சுந்தரம், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் தேவராஜ், பொன்னுத்தாய் ஆகியோர் செய்து இருந்தனர். இந்த முப்பெரும் விழாவில் முன்னாள் படைவீரர் நலம் வாரிய உதவி இயக்குனர் நாகராஜ், தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராமசாமி, ராணுவ அஞ்சல் சேவை துறையில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story