கல்வித்துறை அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டம்
புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி நூறடி சாலையில் உள்ள கல்வித்துறை அலுவலக வளாகத்தில் இயக்குனர் அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் நேற்று இரவு திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது:-
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்த 48 பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று காரைக்காலுக்கு கடந்த 1.9.2015 அன்று பணிமாற்றம் செய்யப்பட்டனர். புதுவை கல்வித்துறை பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் ஒரு பிராந்தியத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். காரைக்காலுக்கு பதவி உயர்வு பெற்று மாறுதல் செய்யப்பட்ட 48 பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்காலில் பணிபுரிந்து வருகிறோம். எனவே புதுச்சேரிக்கு பணிமாறுதல் கேட்டு கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் 374 பட்டதாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதற்கிடையே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் கல்வித்துறை இயக்குனர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘வருகிற ஜூன் மாதம் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆனால் அதனை பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் அவர்கள், எழுத்துபூர்வமான உத்தரவு அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story