சிதம்பரத்தில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்


சிதம்பரத்தில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

புவனகிரி,

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சுந்தரமூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட அவைத்தலைவர் கலையரசன், இணைச்செயலாளர் இந்திராணி, துணைசெயலாளர்கள் விஜயலட்சுமி, நாராயணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுரேஷ்பாபு, குமராட்சி ஒன்றிய செயலாளர் பாசமில்லர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர செயலாளர் தோப்புசுந்தர் வரவேற்றார்.

தலைமைக்கழக பேச்சாளர் வடுகை ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் இளந்தமிழ்ஆர்வலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக கழக பொருளாளரும், மண்டல பொறுப்பாளருமான ரெங்கசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 1,070 ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அண்ணாமலைநகர் பேரூர்கழக செயலாளர் முத்தையன், ஒன்றிய செயலாளர்கள் நடனமயிலோன், மோகன், முல்லைகோவன், நாகவேல், ராஜீ, பொதுக்குழு உறுப்பினர் மருதுவாணன், வக்கீல் பிரபு, நகர அவைத்தலைவர் தமிழ்வாணன், சிறுபான்மை பிரிவு ஜாகீர்உசேன், நகர செயலாளர்கள் செந்தில்குமார், ஷாஜகான், மனோகரன், நிர்வாகிகள் கணேசன், ஆபித்உசேன், அலாவுதீன், ராமதாஸ், லதாமங்கேஸ்கர், வினோத்கண்ணன், ராஜ்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார். முன்னதாக கூட்டத்தில் மாற்றுகட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்களது கட்சியில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்தனர்.

Next Story