ஆட்சியில் இருந்தபோது மாநகராட்சி பணத்தை கொள்ளையடித்து விட்டு பாதயாத்திரை செல்லும் பா.ஜனதாவினரை மக்கள் நம்ப மாட்டார்கள்


ஆட்சியில் இருந்தபோது மாநகராட்சி பணத்தை கொள்ளையடித்து விட்டு பாதயாத்திரை செல்லும் பா.ஜனதாவினரை மக்கள் நம்ப மாட்டார்கள்
x
தினத்தந்தி 2 March 2018 4:30 AM IST (Updated: 2 March 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியில் இருந்தபோது மாநகராட்சி பணத்தை கொள்ளையடித்து விட்டு பாதயாத்திரை செல்லும் பா.ஜனதாவினரை மக்கள் நம்ப மாட்டார்கள்.

பெங்களூரு,

ஆட்சியில் இருந்தபோது மாநகராட்சி பணத்தை கொள்ளையடித்து விட்டு பாதயாத்திரை செல்லும் பா.ஜனதாவினரை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று முதல்- மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சித்தராமையா நகர்வலம்

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நகர்வலம் சென்றார். அரசு பஸ்சில் சென்ற அவர் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். ஓகலி புரத்தில் சுரங்க நடைபாதை மற்றும் மேம்பாலத்தையும், எம்.ஜி.ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்-மந்திரி சித்த ராமையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதுபோல, சர்ச்தெருவில் ‘டெண்டர் சூர்‘ திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையையும் முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

அரசு பஸ்சில் நகர்வலம் சென்ற அவர், நகரில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். மேலும் அந்த பணிகளை விரைந்து முடிக்கும்படி மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். அதன்பிறகு, முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நம்ப மாட்டார்கள்

பெங்களூரு நகரை பாதுகாப்போம் என்று பா.ஜனதாவினர் பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர்கள் தான் ஆட்சியில் இருந்தார்கள். பெங்களூரு மாநகராட்சியும் பா.ஜனதாவிடம் தான் இருந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மாநகராட்சியில் எப்படியெல்லாம் ஊழல் செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துகளை அடமானம் வைத்தார்கள். மாநகராட்சி வருவாய் முழுவதையும் கொள்ளையடித்தார்கள்.

அவர்கள் அடமானம் வைத்துவிட்டு சென்ற சொத்துகளை காங்கிரஸ் கட்சி மீட்டுள்ளது. தற்போது பெங்களூருவை காப்போம் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். அவர் கள் பாதுகாத்தார்களா?. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு தற்போது பாதயாத்திரை செல்வதை மக்கள் நம்ப மாட்டார் கள். பா.ஜனதாவினர் மேற்கொள்ளும் பாதயாத்திரையால், யாருக்கும் பிரயோஜனம் இல்லை. காங்கிரஸ் அரசு மீது பா.ஜனதாவினர் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதை மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Next Story