பிளஸ்-2 பொதுத்தேர்வை 41,461 பேர் எழுதினர்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 461 பேர் தேர்வு எழுதினர். தமிழ் முதல் தாள் கேள்விகள் அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டு இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் கல்வி மாவட்டம், வேலூர் கல்வி மாவட்டம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 761 மாணவர்கள், 10 ஆயிரத்து 783 மாணவிகள் என 20 ஆயிரத்து 544 மாணவ-மாணவிகள், வேலூர் கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 519 மாணவர்கள், 11 ஆயிரத்து 398 மாணவிகள் என 20 ஆயிரத்து 917 மாணவ-மாணவிகளும் என மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 461 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 184 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றினர். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பி அடிப்பவர்களை பிடிக்கவும் 250 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் 44 பேருக்கு அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 40 பேருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது.
தேர்வு மையங்களை கலெக்டர் ராமன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வில் மாணவ- மாணவிகள் காப்பியடிக்கிறார்களா? என பறக்கும்படை அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமும் பஸ், ஆட்டோ மற்றும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளில் பெரும்பாலானவர்களை, நேற்று முதல்நாள் தேர்வு என்பதால் அவர்களுடைய பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர். அதேபோன்று தேர்வு முடிவதற்கு முன்பே பள்ளிக்கு வந்து மாணவ- மாணவிகளை அழைத்துச் செல்ல காத்திருந்தனர்.
சரியாக ஒரு மணிக்கு தேர்வு முடிந்ததும் மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை பெற்றோர்கள் அழைத்துச்சென்றனர்.
முதல்நாள் தேர்வு என்பதால் தேர்வு எப்படி இருக்குமோ, எப்படி எழுதப் போகிறமோ என்ற அச்சத்துடன் சென்றோம். ஆனால் கேள்விகள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தது. அனைத்து கேள்விகளும் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. அதனால் அனைத்து கேள்விகளுக்கும் நன்றாக பதில் எழுதியிருக்கிறோம்.

Related Tags :
Next Story