பட்டைய கிளப்பும் பணச் சந்தை


பட்டைய கிளப்பும் பணச் சந்தை
x
தினத்தந்தி 2 March 2018 11:45 AM IST (Updated: 2 March 2018 11:45 AM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்காவின் கொம்பு என புகழப்படும் சோமாலியாவில், விநோதமான சந்தை ஒன்று இயங்குகிறது.

ஆப்பிரிக்காவின் கொம்பு என புகழப்படும் சோமாலியாவில், விநோத மான சந்தை ஒன்று இயங்குகிறது. அதுதான் சோமாலியாவின் ‘பணச் சந்தை’. அங்கிருக்கும் அழுக்கு படிந்த கட்டிடங்களிலும், புழுதி படிந்த மனிதர்களிடமும் பணக்கட்டுகள் சர்வ சாதாரணமாக விளையாடுகின்றன.

காய்கறிகளையும், பழ வகைகளையும் சாலையில் பரப்பி வைத்திருப்பதைப் போன்று, பணச் சந்தையில் பணக்கட்டுகளை சிதற விட்டிருக்கிறார்கள். இதை சோமாலியாவின் ‘மணி எக்ஸ்சேஞ் மையம்’ என்றும் கூறலாம். அந்தளவிற்கு உலக நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் அத்தனை வகை பணமும் இந்தச் சந்தையில் கொட்டிக்கிடக்கிறது.

ஆப்பிரிக்காவின் பண மதிப்பு, உலக நாடுகளை விட மிக குறைவு என்பதால், 50 அமெரிக்க டாலர்களை அங்கு கொண்டு சென்றால், 50 கிலோ மதிப்பிலான சோமாலிய பணத்தை தூக்கிச் செல்லலாம். அதேசமயம் பணத்தைத் தூக்கிச் சுமக்க கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக தள்ளுவண்டிகளும் வழங்கப்படுகின்றன. அதனால் வெளிநாட்டவர்கள் தங்களது பணத்தை சோமாலிய பணமாக மாற்றி, கத்தை கத்தையாக தள்ளுவண்டிகளில் இழுத்துச் செல்கிறார்கள். என்னதான் பணக்கட்டுகள் சாலையில் சிதறிக் கிடந்தாலும், அங்கு கொள்ளை சம்பவங்கள் நடப்பதில்லை. ஏனெனில் அந்த பணச் சந்தையில் பணத்தோடு கத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதால், திருட்டுச் சம்பவங்கள் நடப்பதில்லை என்கிறார்கள், கடைக்காரர்கள்.

Next Story