பறவைகள் பலவிதம்
இந்த பூமி உயிரினங்கள் பலவற்றிற்க்கும் சொந்தம். அதிலும் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது பூமியின் உயிர் சூழலுக்கு மிக முக்கியம் ஆகும்.
பறவைகள் அந்த வகையில் இந்த உயிர் சூழலில் மிக முக்கியமானவை. “பறவைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்” என்பார்கள். வாழும் சூழலுக்கு ஏற்பவும், வடிவம் மற்றும் உணவுப்பழக்கத்தின் அடிப்படையிலும் பறவைகள் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒவ்வொரு வகையில் இந்தப்பூமியில் உள்ள உயிரினங்களுக்கு பயன்படுகின்றன.
பலவகையான பழங்களைத் தின்று அதன் விதைகளை பரப்புவதன்மூலம் பல வகையான தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு பறவைகள் உதவுகின்றன. மேலும் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளை பறவைகள் இரையாக்கி கொள்வதால் பயிர்களை தாக்கும் பூச்சிகள் குறைந்து பயிர்கள் நன்றாக வளர்வதால் விளைச்சல் அதிகரித்து விவசாயி பயன் அடைகிறான். அதோடு பறவைகளின் எச்சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து போன்றவை பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கின்றன. சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே அறிவதில் பறவைகள் மனிதனுக்கு முன்னோடிகள் என்பது வியக்கதக்க தகவல்.
பறவை இனங்களில் மிக முக்கியமானதாகவும் மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதும் நீர்நிலைவாழ் பறவைகள் ஆகும். இவை குளங்கள், குட்டைகள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள், கடற்கரை போன்ற பகுதிகளில் வாழும் பறவைகள் ஆகும். இவைகளின் எண்ணிக்கையானது நீர்நிலைகளின் நீரின் அளவு மற்றும் மழை அளவை சார்ந்தே அமைகிறது. நீர்நிலைகளில் அதிக எண்ணிக்கையில் பலவகை நீர்நிலைவாழ் பறவைகள் உள்ளது என்றால், நீர் ஆதாரம் செழிப்பாக உள்ளது என்றும், விவசாயம் செழிப்பாக உள்ளது என்றும் அர்த்தம். எனவே, இந்த நீர்நிலைவாழ் பறவைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்தப் பகுதியின் உயிர்சூழல் எனப்படும் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பின் செழுமையை கண்டறிய முடியும்.
தமிழ்நாட்டில் வேடந்தாங்கல், கோடியக்கரை, கூந்தன்குளம் போன்ற பகுதிகளில் நீர்நிலைப்பறவைகள் வாழ் சரணாலயம் உள்ளது. இந்தப்பகுதிகளுக்கு வரும் பறவைகளில் பல வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது. துருவப் பகுதியான சைபீரியா மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மங்கோலியா, சீனா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்து பல்வேறு பறவைகள் வருகின்றன.
இவை அந்த நாடுகளில் கடுங்குளிர் நிலவும் மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் உணவுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் கடல், மலைகளை கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து நம் இடம் தேடி வருகின்றன. இப்படி இடம்பெயரும் பறவைகளின் செயலை “பறவைகள் வலசைபோதல்” என்று பறவை ஆர்வலர்கள் அழைக்கிறார்கள். இப்படி இடம்பெயர்ந்து தமிழகம் வரும் பறவைகளில் பாதிக்குமேல் திரும்பி செல்வதில்லை என்ற அதிர்ச்சி தகவலும் உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குளிர்காலத்தில் இரைதேடியும், இனப்பெருக்கத்திற்காகவும் நம் தமிழகத்துக்கு விருந்தினராக வரும் இந்தப்பறவைகளை சிலர் தங்களுக்கு விருந்தாக்கி வேட்டையாடி கொன்று விடுகிறார்கள். இதனால் அவை அதிக எண்ணிக்கையில் உயிர் இழக்கின்றன.
மேலும் அவை தங்கும் குளங்களை நாம் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளாலும், வேதிபொருட்கள் கலந்த கழிவுகளாலும் மாசுபடுத்துவதால் அவை உயிர் இழக்கின்றன. விருந்துக்கு வீட்டுக்கு வருபவர்களை விஷம் வைத்துக்கொல்வது நியாயமா? நியாயம் இல்லை. எனவே நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருப்பது மற்றும் வேட்டையாடுவதை தடுப்பதன் மூலம் நாம் நம் விருந்தினராக வரும் அந்த பறவைகளை பாதுகாக்க முடியும்.
விருந்தினராக வரும் வெளிநாட்டு பறவைகளையும், நம் நாட்டின் விவசாயத்துக்கு உதவும் உள்நாட்டு பறவை இனங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்ற நோக்கத்தோடு பல இயற்கை நல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகம் எங்கும் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் ஜீவ நதியான தாமிரபரணியின் நீர்பாசனத்துக்கு உட்பட்ட நீர்நிலைகளில் வாழும் பறவைகளை பாதுகாக்க எடுக்கப்படும் பல வித நடவடிக்கைகளின் முதல்கட்டமாக தாமிரபரணி நீர்பாசன நீர்நிலைகளில் உள்ள நீர்நிலைவாழ் பறவைகள் எண்ணிக்கை கண்டறிய சில தொண்டு நிறுவனங்கள் வனத்துறையுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பறவைகள் கணக்கெடுப்பை நடத்துகின்றன.
தாமிரபரணி ஆற்றின் மூலம் சுமார் 800 குளங்கள் நீர் பாசனம் பெறுகின்றன. அவற்றில் சுமார் 70-க்கும் மேல்பட்ட நீர்வாழ் பறவை வகைகள் உள்ளன. இதில் உள்ள பறவைகளை கணக்கெடுக்க மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், வனத்துறையினரை இணைத்து ஏழு, எட்டு குழுக்களை ஏற்படுத்தப்படுகின்றன. இதில் ஒவ்வொரு குழுவிலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் இடம் பெறுகிறார்கள். இப்படி பிரிக்கப்பட்ட ஒவ்வொரு குழுக்களுக்கும் பறவைகளை கணக்கெடுப்பதற்கான குளங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குளங்களில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை மற்றும் வகைகளை கணக்கெடுத்து பதிவுசெய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு குழுவும் பதிவு செய்த எண்ணிக்கைகள் மொத்தமாக தொகுக்கப்பட்டு பறவைகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள் கணக்கெடுக்கப்படுகிறது.
தாமிரபரணி நீர்பாசனத்துக்கு உட்பட்ட நீர்நிலைகளில்மட்டும் இந்த ஆண்டு 38 ஆயிரம் நீர்நிலைவாழ் பறவைகள் இருப்பதாக கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 68 பறவை வகைகள் உள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம் என கணக்கெடுப்பில் தெரியவருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் மழைஅளவு அதிகம் என்பதால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இந்த பறவைகள் கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் தகவல் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எந்த வகை பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றன என்பன போன்றவை அறியப்படுகின்றன.
இந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்கள் உலக அளவில் பறவைகளின் புலம்பெயர்வு பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த கணக்கெடுப்பில் மாணவர்களை பயன்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு பறவைகளின் முக்கியத்துவத்தையும், இயற்கை உயிரின சூழலில் பறவைகளின் பங்களிப்பையும் அறிவதன் மூலமாக பறவைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்த முடியும். பறவைகளின் பாதுகாப்பு மனித இனத்தின் பாதுகாப்பு என்பதை உணருவோம்.
- மணி.தணிகைகுமார், சுற்றுசூழல் பாதுகாப்பு ஆர்வலர்

Related Tags :
Next Story