2¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
நாகை மாவட்டத்தில் 2¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்,
நாகை அருகே பாலையூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தாது உப்புக்கலவையை பயனாளிகளுக்கு வழங்கினார். அதை தொடர்ந்து அவர் பேசும் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தற்போது 14-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பணிகளுக்காக 29 குழுக்கள் கொண்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் கோவிந்தன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் செல்வகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story