திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் ஊடுருவலை தடுக்க வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ரகசியமாக கண்காணிக்கப்படும். தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள். லாட்டரி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர கவனம் செலுத்தப்படும்.
அதிலும் குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகிலோ அல்லது மாணவர் களை குறிவைத்தோ போதை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம். மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், பெற்றோர்கள் மாணவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும்.
அதேபோல் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தற்போது விபத்து ஓரளவு குறைந்துள்ளது. அதை மேலும் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்துவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தற்போது இல்லை. எனினும், கேரள வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் கொடைக்கானல், கம்பம்மெட்டு, போடிமெட்டு, பெரியகுளம், வருசநாடு வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story