தமிழக மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறையை அறிய பிரான்சு நாட்டு மாணவர்கள் ராமேசுவரம் வருகை
தமிழக மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை பற்றி அறிய பிரான்சு நாட்டில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ராமேசுவரம் வந்துள்ளனர்.
ராமேசுவரம்,
தமிழக மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை பற்றி அறிய பிரான்சு நாட்டில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ராமேசுவரம் வந்துள்ளனர். இவ்வாறு ஆசிரியர்கள் ஆலின், இமானுலி ஆகியோர் தலைமையில் எலிசா, ஜெனிபர், ஏஞ்சல், வின்சென்ட் உள்பட 11 மாணவ-மாணவிகளையும் மாவட்ட சுற்றுலா அதிகாரி மருதுபாண்டியன் வரவேற்றார். பின்னர் அவர்கள் தங்கச்சிமடம் வேர்காடு தூய சந்தியாகப்பர் ஆலய பகுதியில் உள்ள ஒரு மீனவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றனர். அங்கு மீனவ பெண்கள் விவசாயம் செய்துள்ள மல்லிகை செடிகளை பார்வையிட்டனர்.
அங்கு அவர்களின் சமையல் முறைகளை கேட்டு தெரிந்து கொண்டதுடன் மீனவ பெண்கள் செய்து கொடுத்த உணவை விரும்பி சாப்பிட்டனர்.
அப்போது பிரான்சு நாட்டை சேர்ந்த மாணவி எலிசா கூறும்போது, கல்லூரியில் படித்து வரும் நாங்கள் தமிழக மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், உணவு முறை, விவசாயம், மீன்பிடி தொழில் போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பினோம். அதனை தொடர்ந்து விவசாயம், மீன்பிடி தொழில் ஆகிய இரண்டும் ஒரே இடத்தில் அமைந்த பகுதி ராமேசுவரம் என்பது சுற்றுலா துறை மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாங்கள் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள மீனவ மக்களை சந்தித்து உணவு முறை, கலாசாரம் குறித்து அறிந்து கொண்டோம். கடலோர பகுதியில் உப்பு காற்று அதிகம் உள்ள இந்த பகுதியில் மல்லிகை செடிகள் பயிட்டு வளர்த்து வருவது ஆச்சர்யமாக உள்ளது.
எங்கள் நாட்டில் அதிகஅளவில் திராட்சை விவசாயம் மட்டுமே நடைபெறும். மற்ற விவசாயம் எங்கள் பகுதியில் மிகவும் அரிது. தமிழகத்தில் தான் அனைத்து விவசாயத்தையும் பார்க்க முடிகிறது. வருகிற 7-ந்தேதி வரை நாங்கள் ராமேசுவரத்தில் தங்கியிருந்து மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் மீன்களை பிடித்து வந்து கம்பெனி மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது, ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் போன்றவற்றை பார்வையிட்டு தகவல்கள் சேகரித்த பின்னர் பிரான்சு நாட்டுக்கு செல்வோம். தமிழ்நாட்டு உணவு மிகவும் பிடித்துள்ளது. அதேபோல பெண்கள் அணிந்திருக்கும் சேலை மிகவும் எங்களை கவர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அதிகாரி மருதுபாண்டியன் கூறும்போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்பது சுற்றுலா துறையின் முதல் கடமை. புண்ணிய தலமான ராமேசுவரம் பகுதியில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்வதற்காக பிரான்சு நாட்டில் இருந்து வந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளோம். இது சுற்றுலா துறையின் வழக்கமான பணியாகும். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்கு பிரான்சு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்று கூறினார். அப்போது மதுரை தானம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி உடனிருந்தார்.

Related Tags :
Next Story