விழுப்புரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்


விழுப்புரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

விழுப்புரம், 

இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மராட்டியம், குஜராத் போன்ற சில மாநிலங்களில் ஹோலி பண்டிகையை ஒரு வாரம் வரை கொண்டாடுகின்றனர்.மக்களிடையே மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகை தென்இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு விழுப்புரம் காமராஜர் வீதி மற்றும் கீழ் அனுமார் கோவில் தெரு, குபேர தெரு ஆகிய இடங்களில் உள்ள வடமாநிலத்தினர் தங்களது வீடுகளுக்கு அரசு அலுவலர்கள் மற்றும் நண்பர்கள், வியாபார பிரமுகர்களை அழைத்து அவர்களது முகங்களில் வண்ணப்பொடியை பூசியும், கட்டி அணைத்தும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Next Story