வங்கி கடன் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று பார்வையிட வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு
கடன் பெற்றவர்கள் கடனை முறையாக பயன்படுத்துகின்றனரா என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை உடன் அழைத்து சென்று வங்கி அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்று அமைச்சர் சரோஜா பேசினார்.
ராசிபுரம்,
இந்தியன் வங்கியின் சேலம் மண்டலம் சார்பில் ராசிபுரம் மைக்ரோ செட் கிளையில் சுய உதவிக்குழு மகளிருக்கான ஏ.டி.எம். திறப்பு விழா, முத்ரா மற்றும் சுயஉதவிக்குழு கடன்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். விழாவில் அமைச்சர் மற்றும் எம்.பி. ஆகியோர் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இந்தியன் வங்கி முன்னாள் மண்டல மேலாளர் தங்கவேல், வங்கி அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். விழாவில் இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளரும், சேலம் மண்டல மேலாளருமான சி.ஆர்.கோபிகிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவில் 100 பேருக்கு முத்ரா கடன் ரூ.95 லட்சமும், 32 சுய உதவிக்குழு மகளிருக்கு ரூ.2.10 கோடியும் உள்பட ரூ.3.5 கோடி கடனுதவியை அமைச்சர் சரோஜா வழங்கி பேசினார்.
பெண்களுக்காகவே கடன் வழங்கி 10 ஆண்டுகளாக தமிழக அரசின் விருதை பெற்று வரும் இந்தியன் வங்கியை பாராட்டுகிறேன். இந்த வெற்றிக்கு காரணம் எனது சகோதரிகளாகிய மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தியதால் தான். அனைத்து சுய உதவிக்குழு மகளிருக்கும் தொழில் பயிற்சி அளித்து வங்கி கடன் அளித்தால் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும்.
சுய உதவிக்குழுவினர் பெரிய தொழில் தொடங்கினால் அதிக பயன்களை பெற முடியும். சுய உதவிக்குழுவினர் என்ன தொழில் தெரியுமோ அதை தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி பெற வேண்டும்.
கடன் பெற்றவர்கள் கடனை முறையாக பயன்படுத்துகின்றனரா என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை உடன் அழைத்து சென்று வங்கி அதிகாரிகள் பார்வையிட வேண்டும். சமூக பொருளாதாரம் மேம்பாடு அடையவும், பெண்களின் வாழ்க்கை தரம் உயரவும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

Related Tags :
Next Story