ஆந்திர சிறைகளில் வாடும் தமிழர்களை விடுவிக்க சட்ட வல்லுனர் குழு அமைக்க வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
ஆந்திர மாநில சிறைகளில் வாடும் தமிழர்களை விடுவிக்க சட்ட வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருச்செந்தூர்,
ஆந்திர மாநில சிறைகளில் வாடும் தமிழர்களை விடுவிக்க சட்ட வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் தனியார் விடுதியில் பா.ஜ.க. சார்பில், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்ட வல்லுனர் குழு
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் தமிழ் தாமரை யாத்திரை மேற்கொண்டு வருகிறேன். 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. பணியாற்றிக் கொண்டிருக்கிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் தி.மு.க. மாற்று சக்தியாக வர முடியாது. ஏனெனில் தி.மு.க.வால் வலுவான எதிர்க்கட்சியாக கூட செயல்பட முடியவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. என்கவுண்ட்டர் பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்ட சென்றதாக கைதான அப்பாவி தமிழர்கள் 84 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். போதிய ஆதாரம் இல்லாமலேயே அவர்களை கைது செய்துள்ளனர். இதேபோன்று இடைத்தரகர்களால் ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள் 750 பேரும் ஆந்திர மாநில சிறைகளில் உள்ளனர். அவர்களை விடுவிக்க சட்ட வல்லுனர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
செம்மரங்கள், சிலைகள் மாயம்
தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும், தஞ்சையில் ராஜராஜசோழன் உள்ளிட்ட சிலைகளும் மாயமாகி உள்ளன. தர்மபுரியில் போலீஸ் நிலையம் எதிரே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து உள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும். தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக உயருகிறது. இதன்மூலம் இந்திய மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தமிழக அரசுடன் இணக்கமாக இருந்தாலும், இங்குள்ள குறைகளை சுட்டிக்காட்ட தயங்க மாட்டோம். பூரண மதுவிலக்குக்கு எதிராக பேசிய நடிகர் கமல்ஹாசன், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மாநாடு நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக மாநிலம் காவிரி தண்ணீரை தர மறுக்கிறது. இதனை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர். அவர்கள் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் பா.ஜ.க. மீது குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரசுடன் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க.வினர் காவிரி தண்ணீரை பெற என்ன நடவடிக்கை மேற்கொண்டனர்? 6 மணி நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் என்று கூறுகிற அன்புமணி ராமதாஸ், பாராளுமன்றத்தில் அதுபற்றி பேசியது உண்டா? தற்போது இந்தி பிரசார சபாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிலை ஏற்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் சிவமுருக ஆதித்தன், தங்கம், மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், கோட்ட அமைப்பு செயலாளர்கள் தர்மராஜன், கிருஷ்ணன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கனகராஜ், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், நகர தலைவர் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story