தனியார் பள்ளியில் மரம் வெட்டிய தொழிலாளி சாவு: உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டம்
தனியார் பள்ளியில் மரம் வெட்டிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 47).தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காய்ந்த மரங்களை வெட்டுவதற்காக சென்றுள்ளார். அவருக்கு உதவியாக பள்ளி நிர்வாகம் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களை அனுப்பினர். இந்தநிலையில் செல்வகுமார் தேக்கு மரத்தை எந்திரத்தை கொண்டு அறுத்த போது, மரம் சாய்ந்து அருகிலுள்ள காய்ந்த தென்னை மரத்தின் மீது விழுந்தது. இதனால் தென்னைமரம் பாதியில் முறிந்து செல்வகுமார் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனையறிந்த பள்ளி நிர்வாகம் உறவினர்களுக்கு கூறாமல் செல்வகுமார் உடலை வைத்து ஜெபம் செய்துள்ளனர். பின்னர் சந்தேகம் வராமல் இருக்க பள்ளி பஸ்சில் 2 மாணவர்கள் உதவியுடன் அவரது உடலை ஏற்றி செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பஸ் அரசு மருத்துவமனை சாலையில் செல்ல முடியாத காரணத்தால், பஸ்சை அண்ணாநகரில் நிறுத்தி விட்டு, உடலை மாணவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து ஒரு மணி நேரம் ஆகிறது என்று கூறினர். அதனைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் உடலை மீண்டும் குழுமூருக்கு கொண்டு சென்றது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் செல்வகுமார் இறந்ததை மறைத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளியின் முன்பு சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், செந்துறை தாசில்தார் உமா மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து செல்வ குமார் உடலை செந்துறை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மறியல் போராட்டத்தால் செந்துறை-திட்டக்குடி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story