ராஜபாளையம் கோர்ட்டு கட்டுமான பணிகள் மாவட்ட முதன்மை நீதிபதி பாார்வையிட்டார்
ராஜபாளையத்தில் கட்டப்பட்டு வரும் கோர்ட்டு கட்டுமான பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி பார்வையிட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அருகே பெரிய மந்தையில் 4 வகையிலான கோர்ட்டு கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் ரூ.9 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா நேற்று வருகை தந்தார். கட்டிட இடங்களை பார்வையிட்ட அவர், நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினார். வருகிற ஆகஸ்டு மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகளை வரவழைத்து திறப்பு விழா நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி முத்துசாரதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோர்ட்டு கட்டிடங்கள் ரூ.8 கோடியே 14 லட்சம் செலவிலும், குடியிருப்பு கட்டிடங்கள் ரூ.1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 2¾ ஏக்கர் இடத்தில் கோர்ட்டு வளாகம் அமைய உள்ளது. தற்போது இந்த வளாகத்தில் 27 மரக்கன்றுகள் நட்டுள்ளோம். மொத்தம் 172 மரக்கன்றுகள் நடப்படும். கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், நீதிபதிகளுக்கும் தனித்தனி நகரும் படிக்கட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சார்பு நீதிமன்றம், குற்்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 3 வகை நீதிமன்றங்கள் மற்றும் 3 வகை நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் அமைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ராஜபாளையம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி வானதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நம்பிராஜன், அய்யாச்சாமி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கனகராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story