கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை தேவை, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் கோடைக்கால குடிநீர் பிரச்சினையை சமாளிக் கமாவட்ட நிர்வாகம் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வறட்சி இருந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளும், கிராமப்பகுதிகளும் பெரும்பாலும் நிலத்தடிநீர் ஆதாரத்தையே குடிநீருக்கு நம்பி இருக்கும் நிலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின்போது பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமமக்கள் முறையான குடிநீர் கிடைக்கவில்லை என்று புகார் கூறி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சி பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரையிலான இடைவெளி செய்யப்பட்டு வருகிறது. விருதுநகரில் 10 நாட்கள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் ஒரு சிலபகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை என்று மக்கள் நகராட்சியை முற்றுகையிடும் நிலைஉள்ளது. அனைத்து நகராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகுதிகளிலும் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை இருந்து வருகிறது.
இதேபோல் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளிலும் நிலத்தடி நீர் தான் பிரதானமான குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கிராமப்பகுதிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முற்றிலுமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராதநிலையில் அங்கு குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் குழாய் உடைப்பு, நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு, வறட்சி போன்ற பல்வேறு காரணங்களால் கிராமப்பஞ்சாயத்து நிர்வாகங்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலையில் உள்ளன. மேலும் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க பஞ்சாயத்துகளில் தேவையான நிதி ஆதாரம் இல்லாத நிலைஉள்ளது.
இந்தநிலையில் கோடைக்காலத்தில் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினை மேலும் கடுமையாகும் நிலைஉள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் ஏற்கனவே வறட்சியால் நீர் ஆதாரங்கள் வறண்டு உள்ள நிலையில், கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சினை மேலும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் மேலும் வறண்டுவிடும் நிலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தொடர் வறட்சியால் கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சினை கடுமையாகும்.
எனவே மாவட்ட நிர்வாகம் கோடைக்கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவையான நிதிஉதவியினை கணக்கிட்டு அரசிடம் இருந்து நிதிபெற உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story