கார்-ஆம்னி பஸ் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி 4 பேர் படுகாயம்
பெரம்பலூர் அருகே கார் மற்றும் ஆம்னி பஸ் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். காரிலிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
மங்களமேடு,
நாமக்கல் மாவட்டம், போதும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 33). இவர், சென்னை ராயப்பேட்டையில் கட்டிட வேலை பாடுகளை செய்து கொடுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரெங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ராயப்பேட்டையை சேர்ந்த மணிமாறன் (35), அனுஷா (27), சித்ரா (27) ஆகியோருடன், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற இருந்த ஒரு நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். காரினை முகம்மது அக்பர்அலி (34) ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் அங்கிருந்த மையத்தடுப்பு கட்டையின் மீது ஏறி எதிரே வந்து கொண்டிருந்த ஒரு ஆம்னிபஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கார் டிரைவர் முகம்மது அக்பர்அலி, மணிமாறன், அனுஷா, சித்ரா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். ஆம்னி பஸ்சின் முன்புறபகுதி மட்டும் சேதமடைந்தது. எனினும் அதிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்தில் இறந்த ரெங்கராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் டிரைவர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story