நெல்லை பேராசிரியர் கொலையில் மேலும் ஒருவர் சிக்கினார்


நெல்லை பேராசிரியர் கொலையில் மேலும் ஒருவர் சிக்கினார்
x
தினத்தந்தி 4 March 2018 2:15 AM IST (Updated: 4 March 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பேராசிரியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை பேராசிரியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராசிரியர் கொலை

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த கொடியன்குளத்தை சேர்ந்தவர் குமார் என்ற கொடியன்குளம் குமார். இவர் பாளையங்கோட்டை அண்ணா நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கும், டாக்டர் பாலமுருகன் என்பவருக்கும் கே.டி.சி. நகரில் உள்ள ஒரு இடத்தை விலைக்கு வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி கொடியன்குளம் குமாரை கொலை செய்ய ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. ஆனால், அப்போது வீட்டில் இருந்த அவரது மருகனும், என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியருமான செந்தில்குமாரை வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியும் அந்த கும்பல் கொலை செய்தது.

மேலும் ஒருவர் சிக்கினார்

ஆள்மாறாட்டத்தில் நடந்த இந்த கொலை தொடர்பாக ஐகிரவுண்டு போலீசார், டாக்டர் பாலமுருகன், அவருடைய உறவினர்கள் ராக்கெட் ராஜா, வக்கீல் பாலகணேசன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த ராஜசேகர் (வயது 30), வடக்கன்குளம் அஸ்வின் (26), நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த மொட்டை சாமி (25) மற்றும் வடக்கு தாழையூத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மற்ற 5 பேரை தனிப்படை போலீசார் பல்வேறு ஊர்களுக்கு சென்று வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பேராசிரியர் கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜா (30) என்பவர் போலீசாரிடம் நேற்று சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story