ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2018 4:15 AM IST (Updated: 4 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி, கீரமங்கலத்தில் த.மா.கா. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவரங்குளம் ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்தாய் வாழ்த்திற்கு பதிலாக சமஸ்கிருத பாடலை பாடி தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்தும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும்.

கீரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் நீண்ட காலமாக பதிவு செய்து மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்கிட வேண்டும். கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவதுடன், பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை அரங்கும் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் கோபால், மாவட்ட பார்வையாளர் இன்டெர்நெட் ரவி, மாநில இணை செயலாளர் முத்துக்குமாரசாமி, மாநில கொள்கைவிளக்க அணி கராத்தே கண்ணையன், மாவட்ட வர்த்தக அணி முருகேசன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். 

Next Story