நெல்லை டவுன் மாநகராட்சி பள்ளியில் அறிவியல் பயிற்சி வகுப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்
நெல்லை டவுன் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்று வரும் அறிவியல் பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
நெல்லை,

அறிவியல் பயிற்சி
நெல்லை டவுன் மாநகராட்சி (கல்லணை) பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சி.எம்.இ.எஸ். அகாடமி மூலம் அறிவியல் செயல்விளக்க பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உயர் கல்வி
பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகங்கள் மூலம் பல்வேறு அறிவியல் விளக்கங் களை படித்தாலும் அவற்றை செயல் விளக்கத்தின் மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு சி.எம்.இ.எஸ். அகாடமி மூலம் அறிவியல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பள்ளியிலும் மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் நீங்கள் அறிவியல் பாடத்தை எளிதாக புரிந்து கொண்டு படிக்க முடியும்். நீங்கள் சிறப்பாக கல்வி பயின்று, நல்ல குறிக்கோள்களை வளர்த்துக் கொண்டு, உயர்கல்வி கற்று உயர்பதவிகளை பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) இளம்பகவத், மாநகர நல அலுவலர் பொற்செல்வன், பள்ளி கல்வித்துறை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு, உதவி தலைமை ஆசிரியர்கள் ராதா, நல்லசிவம் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story