திசையன்விளையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலத்துக்கு வரவேற்பு
திசையன்விளையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திசையன்விளை,
திசையன்விளையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவதார தினவிழா ஊர்வலம்
அய்யா வைகுண்டர் 186-வது அவதார தினவிழாவை முன்னிட்டு மாசி மகா ஊர்வலம் என்னும் அவதார தினவிழா ஊர்வலம் நேற்று காலை திருச்செந்தூர் அய்யா பதியில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் காயாமொழி, உடன்குடி, படுக்கப்பத்து, தட்டார்மடம், இடைச்சிவிளை வழியாக நெல்லை மாவட்டம் திசையன்விளைக்கு நேற்று மதியம் வந்தது. ஊர்வலத்துக்கு தலைமை தாங்கி வந்த பூஜிதகுரு பையன் ஸ்ரீராமுக்கு ஊர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திசையன்விளை நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சேம்பர் செல்வராஜ், எருமைகுளம் நாராயண சுவாமி கோவில் நிர்வாகி குருசாமி நாடார், திசையன்விளை கூட்டுறவு வங்கி துணை தலைவர் பாலன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் விஜயபெருமாள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
வழிநெடுகிலும் அன்னதர்மம்
தொடர்ந்து யானை முன் செல்ல மேளதாளத்துடன் புறப்பட்ட இந்த ஊர்வலத்தில், வழிநெடுகிலும் பழங்கள், குளிர்பானங்கள், அன்னதர்மம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து எருமைகுளம் நாராயண சுவாமி நிழல்தாங்கலில் பணிவிடை நடந்தது. அதன்பிறகு சொக்கலிங்கபுரம், நவ்வலடி, கூடங்குளம் வழியாக நாகர்கோவிலுக்கு சென்றது.

Related Tags :
Next Story