சோழிங்கநல்லூரில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் சாவு
சோழிங்கநல்லூரில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.
சோழிங்கநல்லூர்,.
கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 25). இவர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை 4½ மணியளவில் பணி முடிந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
சோழிங்கநல்லூர் பொன்னியம்மன்கோவில் அருகே வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ஆனந்த் லாரி சக்கரத்தில் சிக்கி பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோழிங்கநல்லூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story