திருக்கோவிலூர் அருகே மர்ம கும்பலால் தாக்கப்பட்ட தாய், மகளை திருமாவளவன் பார்த்தார், சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தல்
திருக்கோவிலூர் அருகே மர்ம கும்பலால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய், மகளை திருமாவளவன் பார்த்தார். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆராயி (வயது 45). இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
ஆராயி மற்றும் இளைய மகள் தனம்(15), மகன் சமயன்(8) ஆகியோர் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தனர். தனம் 8-ம் வகுப்பும், சமயன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் இவர்கள் 3 பேரையும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே சமயன் உயிரிழந்தான். தாய், மகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஆபத்தான நிலையில் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று புதுவை வந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் ஆராயி, தனம் ஆகியோரை பார்த்தார். அவர்களின் உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக் குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதன்பின் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மர்ம கும்பலால் தாக்கப்பட்ட ஆராயி, அவரது மகள் தனம் ஆகியோர் சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மரில் நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் கோமா நிலையில் இருந்து மீள முடியவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. விரைவில் அவர்கள் குணம் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமான வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் கோப்புகள் மூடப்பட்டுள்ளன. அப்படி ஒரு நிலை இந்த வழக்கிலும் ஏற்பட்டு விடக்கூடாது. இந்த கொடூர சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒரு குழுவை சேர்ந்தவர்களா? அல்லது வெவ்வேறு குழுக்களை சேர்ந்தவர்களா? என்பதை போலீசார் கண்டறிந்து இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story