காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் ஈரோட்டில் தா.பாண்டியன் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இன்றைய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஈரோடு வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
40 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டு இறுதி தீர்ப்பு அளித்து உள்ளது. அதில், நதிநீர் பங்கீட்டை கவனிக்கவும், முறைப்படுத்தவும் மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு காலக்கெடுவும் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த காலம் கடந்து கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் மத்திய அரசின் மந்திரிகள் சிலர் கருத்து என்கிற பெயரில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை என்று தெரிவித்து உள்ளனர். கோர்ட்டில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார்கள்.
சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை ஏற்கமாட்டோம் என்று மறைமுகமாக கூறுவது அப்பட்டமாக தெரிகிறது. நதிநீர் பங்கீடு என்பது நமக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. நாடு முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. நாட்டின் முக்கிய தொழிலான விவசாயத்தை கருகிப்போகச்செய்யும், தொழிலை அழிக்கும் பிரச்சினையாக நதிநீர் பங்கீடு உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் நமது அடிப்படை உரிமையை பெற வாதிட்டு வெற்றி பெற வேண்டும். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மத்திய மந்திரிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சிரமமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள். அமைக்கப்படும் என்று யாரும் உறுதி அளிக்கவில்லை. பதில் அளிக்க வேண்டிய பிரதமரும் மவுனமாகவே உள்ளார்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு சீர்கேடுகள் குறித்த செய்திகள் வெளிவரும்போது அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருந்து ராஜராஜன் சிலை மற்றும் அவருடைய மனைவி லோகமாதேவி சிலை ஆகியவை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே கடத்தப்பட்டு இருப்பதும், அதுபற்றி இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்ற தகவலும் அதிர்ச்சியாக உள்ளது. இதுபோல் வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்பவர்கள் பற்றிய செய்திகளை பார்க்கும்போது மானக்கேடாக உள்ளது. வெளிநாடுகளில் கடன் வாங்கி விட்டு, சொந்த நாட்டின் செல்வத்தை கொள்ளையடிப்பது மிகவும் மானக்கேடாகும். இந்த அவமானங்களில் இருந்து இந்திய மக்கள் மீண்டுவர விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நடந்து முடிந்த மாநில தேர்தல்களின் முடிவுகள், மத்திய பா.ஜனதா அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது என்பதை காட்டுகிறது.
மத்திய அரசு, தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம், பஞ்ச நிவாரணம், புயல் நிவாரணம் தருவதாக அறிவித்தது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது 10 மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டிகளாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பணம் செலவு இல்லாமல் அமைக்க வேண்டிய காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தையே அமைக்க மறுக்கும் மத்திய அரசு, கண்டிப்பாக கோடிகோடியாக பணத்தை தராது. எனவே மத்திய அரசு அறிவித்த பணத்தை தமிழகத்துக்கு பெற தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் தா.பாண்டியன் பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story