அசல்பாவில் பழைய பொருள் குடோனில் பயங்கர தீ விபத்து


அசல்பாவில் பழைய பொருள் குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 4 March 2018 4:00 AM IST (Updated: 4 March 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

அசல்பாவில் உள்ள பழைய பொருள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

அசல்பாவில் உள்ள பழைய பொருள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

மும்பை அந்தேரி, அசல்பா கைராணி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் தொழிற்கூடங்கள் செயல்பட்டு வந்தன. மேலும் குடோன்களும் உள்ளன. இங்குள்ள ஒரு குடோனில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனம் மற்றும் 6 தண்ணீர் டேங்கர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்தநிலையில் தீ குடோனில் இருந்து அருகில் உள்ள கெமிக்கல், ஆடை தொழிற்கூடங்களுக்கும் பரவியது. கட்டிடத்தில் எரிந்த பயங்கர தீயால் அந்த பகுதியே புகை மண்டலமானது.

பொருட்கள் நாசம்

தீயணைப்பு துறையினர் ஒரு சில மணி நேரங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் முழுமையாக தீயை அணைக்கும் பணி நேற்று மதியம் வரை நடந்தது. இந்த விபத்தில் பழைய பொருள் குடோன் மற்றும் துணி, கெமிக்கல் தொழிற்கூடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குடோனில் பழைய பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம், என்றார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story