கன்னங்குறிச்சி பகுதியில் நெல் விலை வீழ்ச்சி
கன்னங்குறிச்சி பகுதியில் நெல் விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கன்னங்குறிச்சி,
கன்னங்குறிச்சி பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணத்தால், அனைத்து விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல் நடவு செய்தனர்.
தற்போது நன்றாக விளைந்து நெல்லை விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் நெல் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கன்னங்குறிச்சி பகுதியில் நெல் விளைச்சல் அதிகரித்தது போல, பிற மாவட்டங்களில் இருந்தும் நெல் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு சராசரியாக 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,200-க்கு விற்ற குருவை நெல், தற்போது அரிசி ஆலைகளில் ரூ.750-க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் ரூ.300-க்கு விற்ற வைக்கோல் கட்டு தற்போது ரூ.140-க்கு விற்கப்படுகிறது.
இதே போல சேலம் மாவட்டத்தில் மிகமுக்கிய நீர்ஆதாரங்களில் ஒன்றாக கன்னங்குறிச்சி புது ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரி கடந்த ஆண்டு வறண்டது. இதனால் இந்த ஏரி தூரப்பட்டதுடன், அகலமும், ஆழமும் அதிகப்படுத்தப்பட்டது. அதன்பின்பு பெய்த கனமழை காரணமாக புது ஏரி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் தற்போது கடும் வெயில் அடித்து வருவதால், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

Related Tags :
Next Story