மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம்
மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்கிய கோமாரிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.
மொரப்பூர்,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அரசு கால்நடை மருத்துவமனை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இந்த முகாமில் கால்நடை டாக்டர் வெற்றிவேல், கால்நடை ஆய்வாளர் மணிமேகலை, கால்நடை பராமரிப்பு உதவியாளர்ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்றப்பட்டி, நாளை (திங்கட்கிழமை) வகுத்தானூர், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஒபிளிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்த நாட்களில் வேப்பசென்னம்பட்டி, சென்னம்பட்டி, கொண்டையம்பட்டி, ஆண்டிப்பட்டி, தாசிரஹள்ளி, ரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, குரும்பட்டி ஆவலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பசுமாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.
மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 21-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. பசு மற்றும் எருமைகளின் வாய் மற்றும் நாக்கில் கொப்பளம் மற்றும் புண்கள் ஏற்படுதல், கால் குளம்புகளில் புண் வருதல் ஆகியவை கோமாரி நோய் வருவதற்கான அறிகுறியாகும். நோய் வந்தால் கரு சிதைவு,பாலின் அளவு குறைதல், எதிர்காலத்தில் சினை இருப்பதற்கான வாய்ப்பு குறைவு ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டுவந்து கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என்று இந்த முகாமில் பங்கேற்ற மொரப்பூர் கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story