ஆடை உலகத்து அழகு ராணி
“சிறுவயதிலே நான் தயக்கமின்றி கேமராவை எதிர்கொள்ளத் தயாராகி விட்டதால், விளம்பர பட ஷூட்டிங்குகளுக்கு செல்வது பள்ளிப் பருவத்திலே எனக்கு சுற்றுலா செல்வது போல் ஜாலியான அனுபவமாகி விட்டது.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரே நாளில் நான்கு நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் நடித்தேன். ஒருசில நாட்கள் அந்த மேக்கப்பை கலைக்காமலே மதிய நேரங்களில் கல்லூரிக்கு வந்து பரீட்சை எழுதியிருக்கிறேன். எங்கள் கல்லூரி முதல்வர் ரொம்ப வித்தியாசமானவர். அவ்வப்போது என்னை தேடி வந்து பார்த்து, ‘நாளை எந்த விளம்பர படத்தில் நடிக்கப்போகிறாய்?’ என்று ஆர்வமாக கேட்பார். அவர்களை போன்றவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் இன்றுவரை என்னால் மாடலிங் உலகில் நிலைத்து நிற்க முடிகிறது” என்று நெகிழ்ச்சியாக சொல்கிறார், பூர்த்தி பிரவீன். மாடலிங் உலக பிரபலங்களில் இவரும் ஒருவர்.
26 வயதான இவருக்கு பல முகங்கள். 5 வயதில் விளம்பர படங்களில் தோன்றிய இவர் அதன் பின்பு விளையாட்டிலும், சாகசத்திலும் கவனம் செலுத்தினார். பாராசெய்லிங் மூலம் வானில் பறப்பதும், குதிரை சவாரியில் கலக்குவதும், விளையாட்டில் ஜொலிப்பதும் இவரது வழக்கமாக இருந்தது. பின்பு படிப்பிலும், மாடலிங்கிலும் கவனம் செலுத்தினார். பூர்த்தி பிரவீன், பிரபலமான நிறுவனங்களுக்காக 500-க் கும் மேற்பட்ட விளம்பர படங்களில் தோன்றியிருக்கிறார். கூடவே பேஷன் டிசைனராகவும் வலம்வந்து கொண்டிருக்கிறார். பிரபல நடிகை நயன்தாராவுக்கு பிடித்த ஆடை வடிவமைப்பாளராக திகழும் இவர், சிறந்த பேஷன் டிசைனருக்குரிய விருதும் பெற்றிருக்கிறார். வேலைக்காரன், இமைக்கா நொடிகள் போன்ற ஏராளமான படங்களில் பணிபுரிந்திருக்கும் பூர்த்தி பிரவீனுடன் நமது உரையாடல்!
உங்களை பற்றி கூறுங்கள்?
“நான் தமிழ் பெண். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். எனது பெற்றோர் பிரவீன்குமார்- சிந்துஜா பிரவீன். எனது தந்தை விவசாயத்தை அதிகம் நேசிப்பவர். எங்கள் பண்ணையில் இயற்கை முறை விவசாயத்தை புதுமையாக செய்துகொண்டிருக்கிறார். எனக்கும் விவசாயம் தெரியும். களை பறிப்பதில் இருந்து அனைத்து விவசாய வேலைகளையும் பார்ப்பேன். தற்போது விவசாயம் சற்று மங்கிய நிலையில் இருந்தாலும், அடுத்த ஐந்தாண்டுக்குள் மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாய பணிகளை நோக்கித் திரும்புவார்கள் என்பது என் தந்தையின் கணிப்பாக இருக்கிறது. அதனால் நானும் இப்போதிருந்து விவசாயத்தில் கவனம் செலுத்துகிறேன். சென்னைக்கு வெளியே எங்கள் விவசாய பண்ணை உள்ளது. எனது தாயார் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்தவர். பேஷன் டிசைனிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்சி- எம்.ஏ. விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன்”
விளம்பர படங்களில் நடிக்கும் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?
“இது பெண்களுக்கு புகழைத் தேடித்தரும் துறை. பிரப லமான பிராண்டுகளுக்காக விளம்பரத்தில் டெலிவிஷன் மூலமாக நாம் தோன்றும்போது வீட்டுக்கு வீடு நமது முகம் பரிச்சயமாகி விடுகிறது. பொருத்தமான ஆடை, அணிகலன்களோடு அழகாக நாம் தோன்றும்போது நமக்கும், பார்க்கிறவர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். தமிழ்நாட்டில் பல இடங்களில் ஹோர்டிங்கில் நான் தோன்றுவதால், நேரடியாக எங்கு சென்றாலும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது. இப்படிப்பட்ட பல காரணங்களுக்காக நான் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். நான் கலாசாரரீதியான உடைகளில்தான் தோன்றுவேன். அளவுகுறைந்த ஆடைகளில் தோன்றமாட்டேன்”
இந்த துறையில் உங்களால் மறக்க முடியாத அனுபவம்?
“சென்னை மாடலிங் உலகத்திற்கும், மும்பை மாடலிங் உலகத்திற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. அங்கு ஒரு விளம்பர படத்திற்கு மாடல் தேர்வு நடந்தால் 100 பேர் வருவார்கள். இங்கு 20 பேர்தான் வருவார்கள். மும்பை மாடல்கள் உச்சி முதல் பாதம் வரை வித்தியாசமாக தெரியவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் ‘ஹைஹீல்ஸ்’ செருப்போடுதான் எப்போதும் வலம் வருவார்கள். பிரபல நிறுவனம் ஒன்றின் தேர்வுக்காக நான் மும்பைக்கு சென்றபோது, சாதாரண செருப்பு அணிந்து எளிமையாக காட்சியளித்தேன். என்னை பார்த்த அங்குள்ள மாடல்கள், ‘சென்னை பெண்ணா.. நீ எல்லாம் ஒரு மாடலா?’ என்று கேட்டார்கள். இறுதியில் நான்தான் அதில் நடிக்க தேர்வானேன். வருடத்துக்கு வருடம் அந்த விளம்பரத்தை புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறார்கள். திறமை என்பது நமது செருப்பில் இல்லை. மூளையிலும், நேர்த்தியிலும், கடின உழைப்பிலும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்”
மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும்போதே எப்படி பேஷன் டிசைனராக புது அவதாரம் எடுத்தீர்கள்?
“சிறுவயதிலே எனக்கு விதவிதமாக உடை அணியும் ஆர்வம் இருந்தது. அம்மா எனக்காக டிரஸ் மெட்டீரியல் வாங்கி புதுமாடல்களில் தைத்துதருவார். நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே எனக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்க அம்மா கடைகளுக்கு என்னையும் அழைத்துச்செல்வார். அதனால் வண்ணங்களை பற்றிய புரிதல் எனக்கு அப்போதே ஏற்பட்டுவிட்டது. பள்ளிப் பருவத்தில் இருந்தே மாடலிங் செய்து வந்ததால் பிரபலமான 50-க்கும் மேற்பட்ட பேஷன் டிசைனர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஷூட்டிங்கில் எனக்கு தேவைப்படும் உடைகளை அவர்களோடு சேர்ந்து வடிவமைத்திருக்கிறேன். அந்த அனுபவத்தை அடிப்படையாகவைத்து, நானும் கூடுதலாக அது பற்றி கற்றுவிட்டு, ஒரு குழுவை உருவாக்கி ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்வதற்கும், சினிமா நடிகர்-நடிகைகளுக்கு டிசைன் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விளம்பரங்களில் மாடல்கள் மின்னல்போல் சில வினாடிகளே தோன்றிமறைவார்கள். அதற்கு தக்கபடி உடைகளை வடிவமைக்க வேண்டும். சினிமாவுக்கு அப்படியல்ல, கதைக்கு தக்கபடியும், காட்சிகளின் தன்மைக்கு தக்கபடியும், நடிகைகளுக்கு ஏற்றபடியும், பருவகாலத்திற்கு பொருந்தும் விதத்திலும் ஆடை வடிவமைக்கவேண்டும். இப்போது நான் மாடலிங் துறைக்கும், சினிமா துறைக்கும் பேஷன் டிசைனிங் செய்கிறேன். நடிகர்- நடிகைகளுக்கு தனிப்பட்ட முறையிலும் வடிவமைக்கிறேன். மணப்பெண்களுக்கும் நவீன முறையில் ஆடைகள் உருவாக்குகிறேன். இதற்காக `ருத்ராட்ச் பொட்டிக்' என்ற மையத்தையும் நடத்தி வருகிறேன். இதுவரை 7 சினிமாக்களில் பேஷன் டிசைனராக பணியாற்றியுள்ளேன்”
சினிமா நடிகைகளில் யாருக்காக நீங்கள் அதிகமாக ஆடை வடிவமைக்கிறீர்கள்?
“நான் ஒரு விளம்பர பட ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்தபோது நயன்தாரா மேடத்திடம் இருந்து அழைப்பு வந்தது. இமைக்கா நொடிகள் படத்திற்காக அவருக்கு ஆடை வடிவமைத்து தர முடியுமா என்று கேட்டார்கள். இரண்டு நாளிலே 9 விதமான உடைகளை வடிவமைக்க வேண்டியதிருந்தது. மிகுந்த சிரத்தை எடுத்து அதனை உருவாக்கினேன். அதை பார்த்துவிட்டு பாராட்டினார்கள். அவருக்கு உடை வடிவமைத்த வயது குறைந்த பெண் நானாகத்தான் இருக்கும். சைமா விருது விழாவில் அவர் அணிந்திருந்த உடையும் நான் வடிவமைத்தது தான். கொலையுதிர்காலம் படத்திலும் அவருக்காக பணியாற்று கிறேன். அவர் எனது வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்துகிறார்”
நடிகைகளுக்கு ஆடை தயார் செய்யும்போது எந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்து வீர்கள்?
“நாம் எந்த நடிகைக்கு ஆடை வடிவமைக்கிறோமோ அந்த நடிகையை பற்றி அவரைவிட அதிகமாக சிந்திக்க வேண்டும். அப்படி சிந்தித்தால்தான் அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான உடைகளை உருவாக்கித்தர முடியும். நாம் நடிகைகளுக்கு தயார் செய்து கொடுக்கும் ஆடை அழகாகவும், நேர்த்தியாகவும், சவுகரியமாகவும் இருக்க வேண்டும். அறம் படத்தில் நயன் தாராவுக்காக ‘ஹை காலர் ஸ்லீவிங்’ ஜாக்கெட் வடிவமைத்தேன். அது சராசரி பெண் களையும் கவர்ந்துவிட்டது. அதுபோன்ற ஜாக்கெட் வடிவமைத்து தரும்படி நிறையபேர் கேட்டார்கள். எனது பேஷன் டிசைனிங் குழுவில் நவதேவி ராஜ்குமார், சுசித்ரா போன்றவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்”
முதல் படத்தில் இருந்து சமீபத்தில் பணியாற்றும் படங்கள் வரை நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?
“இந்த துறையில் செயல்பட மிகுந்த பொறுமை அவசியம். நடிகர், நடிகைகளின் மனநிலையை உணர்ந்து செயல்படவேண்டும். கோபம் வந்தாலும் சிரித்துக்கொண்டே பேசவேண்டும். இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கவேண்டும். முதல் படமான டிமான்டி காலனி ஆங்கிலேயர் காலத்து கதை. அதற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு ஆடை, அணிகலன், காலணி போன்றவைகளை எல்லாம் உருவாக்கினோம். தற்போது நான் பணியாற்றும் கொரில்லா படத்தில் ஜிம்பன்சி நடிக்கிறது. அதன் மனநிலையையும், சவுகரியத்தையும் உணர்ந்து அதற்கும் சேர்த்து ஆடை உருவாக்கியிருக்கிறேன். தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, இயக்குனர் டான்சான்டி, நடிகர் ஜீவா, ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரன், ஆர்ட் டைரக்டர் நாகு போன்றவர் களோடு ஒருங்கிணைந்து கொரில்லா படத்தில் பணியாற்றுகிறேன். ஜிம்பன்சி எங்களோடு நெருக்கமாக, அன்பாக பழகுகிறது. அது ஒரு திரில்லான அனு பவமாக இருக்கிறது” என்கிறார்.
பூர்த்தி பிரவீன் மாடலிங், ஆடை வடிவமைப்பு ஆகிய இரு துறைகளிலும் விருதுகள் பெற்றுள்ளார். அது பற்றி கூறுகையில்..
“மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரம் வளர்ப்பு தொடர்புடைய திட்டம் ஒன்றை அறிவித்தபோது அதில் தோன்றி நடிக்க மாடலிங் பெண்ணைத் தேடினார்கள். எனது போட்டோவை ஜெயலலிதா அவர்களே பார்த்து தேர்ந்தெடுத்து என்னை அழைத்து மரம் வளர்ப்பு பற்றி பேசி, நடிக்கவைத்தார். மாடலிங் துறை சாதனைகளுக்காக ‘ஸ்டைல் ஐகான்’ என்ற விருதும் கிடைத்தது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ‘டெக்கோபெஸ்’ விருதினையும் பெற்றுள்ளேன். அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஓட்டு மூலம் அந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்தார்கள். பேஷன் டிசைனிங் துறையில் இப்போதுதான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கிறது” என்று கூறும் பூர்த்தி பிரவீன், “இந்த உலகம் மிக அழகானது. அதனால் இயற்கையையும், எல்லா உயிரினங்களையும் நாம் ரசித்துப் பார்க்க வேண்டும். அவைகளை ஆழ்ந்து பார்க்கும்போது அழகுணர்ச்சியால் நமக்குள் புதுப்புது கற்பனை காட்சிகள் தோன்றும். அந்த காட்சிக்கு கலரும், உருவமும் கொடுத்து ஆடைகளோடு ஒருங் கிணைத்தால் புதுப்புது டிசைன்கள் உருவாகிவிடும். அதனால் நான் இயற்கையோடும், விவசாயத்தோடும் நெருங்கி வாழ்கிறேன்” என்கிறார், இந்த இயற்கை நாயகி!

Related Tags :
Next Story