விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து அவர்கள் தரிசனம் செய்தனர்.
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை தருவர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் வழக்கத்தைவிட 2 மடங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதே போல் விடுமுறை தினங்களிலும் முருகனை தரிசிக்க மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் திரளான பக்தர்களை காணமுடிந்தது.
ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, சிறப்பு மற்றும் கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story