கார் டிரைவரை கொன்று கடலில் வீசிய சம்பவம்: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
கடலூரில் கார் டிரைவரை கொன்று கடலில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
சென்னை தண்டையார்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் வினோத்(வயது 27). கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு முதல் கடலூர் முதுநகரில் தங்கி இருந்து மாணவ-மாணவிகளை காரில் ஏற்றிக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி வினோத் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனங்குப்பம் கடலில் நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. அந்த உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
இது பற்றிய தகவலின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் காணாமல் போன வினோத் என்பது தெரிந்தது. மேலும் அவரின் கை, கால்களை கட்டி கடலில் போட்டு மர்மநபர்கள் கொலை செய்து இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து வினோத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஆண்டவர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் வினோத், மாணவி ஒருவரை கடத்தி சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அவரை அந்த மாணவியின் உறவினர்கள் யாரேனும் கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரேனும் அவரை கடத்தி கொலை செய்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மாயமான நாளான கடந்த 28-ந் தேதி அன்று கடைசியாக அவர் கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், மர்மநபர்கள் அவரை கடத்திச் சென்றார்களா? என்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story