சென்னக்குப்பம் ஊராட்சியில் புதர், குப்பைகள் நிறைந்து காணப்படும் குளத்தை சீரமைக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை


சென்னக்குப்பம் ஊராட்சியில் புதர், குப்பைகள் நிறைந்து காணப்படும் குளத்தை சீரமைக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 March 2018 3:15 AM IST (Updated: 5 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னக்குப்பம் ஊராட்சியில் புதர், குப்பைகள் நிறைந்து காணப்படும் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னக்குப்பம் ஊராட்சியில் உள்ள கூட்ரோடு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது. தற்போது இந்த குளம் புதர் மண்டி குப்பைக்கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குப்பைகளோடு கழிவுநீரும் கலந்துள்ளதால் இந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. இங்கு உள்ள இந்த பழமையான குளத்தின் கரையை பலப்படுத்தி சுற்றியுள்ள குப்பைக்கழிவுகளை அகற்றி சீரமைத்தால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும்.

எனவே குளத்தில் கழிவுநீர் கலக்காமலும், குப்பை கழிவுகளை கொட்டாமலும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கண்ட பகுதிகளில் குப்பை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் அமைத்து தர வேண்டும். இந்த பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story