செம்பரம்பாக்கத்தில் பழைய துணிகள் தரம் பிரிக்கும் குடோனில் தீ விபத்து
செம்பரம்பாக்கத்தில் பழைய துணிகள் தரம் பிரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு பழைய துணிகளை கொண்டு வந்து, அதனை தரம் பிரித்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
சுற்றிலும் சுவர் அமைக்கப்பட்டு மேற்கூரை இல்லாமல் திறந்தவெளியில் இருக்கும் இந்த குடோனில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், குடோனுக்கு அருகில் உள்ள அறையில் தங்கி வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் அனைவரும் அறைக்கு தூங்கச்சென்று விட்டனர். நள்ளிரவில் திடீரென குடோனின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத் தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடோனில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுட்டனர்.
ஆனால் துணிகள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருந்தது. இதனால் கூடுதலாக பூந்தமல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 2 தீயணைப்பு வீரர்களும் சுமார் 1 மணி நேரம் போராடி குடோனில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர்.
தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய துணிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்தால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்து ஏற்பட்டதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுபற்றி நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நாசவேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் அடிக்கடி இதேபோல் தீ விபத்து ஏற்படுகிறது. இந்த குடோனை அங்கிருந்து அகற்ற வேண்டும். இந்த பகுதியிலேயே தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story