வர்த்தக துறைமுக பணிக்கு 2 மாதங்களில் அடிக்கல் நாட்டுவிழா பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
கன்னியாகுமரி அருகே வர்த்தக துறைமுக பணிக்கு 2 மாதங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று இந்து சமய மாநாடு நடந்தது. மாநாட்டில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஆண்டாள் குறித்து பிரச்சினை எழுந்த போது, 10 ஆயிரம் பெண்கள் கூடினார்கள். தமிழகத்தில் ஆன்மிக அரசியல் தழைத்தோங்கும். திரிபுராவில் பா.ஜனதா ஆட்சி அமைப்பது போல் தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த 3½ ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. நான்குவழி சாலை பணிகள் வருகிற ஜூலை மாதத்தில் முடிவடையும். ரூ.4 ஆயிரம் கோடி செலவில் இரட்டை ரெயில் பாதை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தக துறைமுகம் வர உள்ளது. இதற்கு 2 மாதங்களில் அடிக்கல் நாட்டப்படும். மண்டைக்காடு கோவிலில் தங்கத்தேர் வேலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. 2 மாதங்களில் வேலை முடிந்து தங்கத்தேர் ஓடும். குமரி மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை ரூ. 200 கோடி செலவில் விரைவில் அமைக்கப்படும். இ.எஸ்.ஐ. மருத்துவமனை ரூ.106 கோடி செலவில் வர உள்ளது. தமிழக அரசு நிலம் தந்தால் உடனே அமைக்கப்படும்.
மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பால வேலைகள் ரூ.307 கோடி செலவில் முடிக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. தக்கலை, களியக்காவிளையில் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் ஒப்புதல் கிடைத்து விடும். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கடல் பாதைக்கு 2 ஆண்டுகளாக முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி விரைவில் வேலை தொடங்கப்படும்.

Related Tags :
Next Story