திப்பம்பட்டி, பாறைக்கொட்டாய் கிராமங்களில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
திப்பம்பட்டி,பாறைக்கொட்டாய் கிராமங்களில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையங்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா திப்பம்பட்டி மற்றும் பாலக்கோடு தாலுகா பாறைக்கொட்டாய் ஆகிய கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. உதவி கலெக்டர் ராமமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் வேலாயுதபெருமாள் பிள்ளை, துணை இயக்குனர்கள் பாரதி, வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய கால்நடை மருத்துவ கிளைநிலையங்களை திறந்து வைத்து கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பு மருந்துகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளை நிலையங்களை குத்துவிளக்கேற்றி அந்த நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த 2 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் 12 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும். தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை மூலம் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களால் பசுமைபுரட்சி ஏற்பட்டு உள்ளது என்றார்.
இந்த விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜன், அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரெங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கோபால், மாணிக்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, மதிவாணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story