தேவிபட்டினம் அருகே குழாய்கள் உடைப்பு: 6 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் குடிநீர் கிடைக்காமல் பரிதவிப்பு
தேவிபட்டினம் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் 6 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைத்தொட்டிக்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேவிபட்டினத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின்னர் தேவிபட்டினத்தில் இருந்து கழனிகுடி, பாண்டமங்கலம், நாரணமங்கலம், மாதவனூர், பெருவயல் உள்பட 6 ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதற்காக தேவிபட்டினம் ஊராட்சி சார்பில் ஒவ்வொரு மாதமும் ரூ.47,000 வீதம் ராமநாதபுரத்தில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் வாரியத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகத்துக்காக ஒவ்வொரு ஊராட்சியும் அதற்கான தொகையை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தேவிபட்டினத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் வழியில் அமைக்கப்பட்ட குழாய்கள் அடிக்கடி உடைந்து தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியேறி ஓடுகிறது. இவ்வாறு கடந்த 3 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் அனைத்தும் வெளியேறி வீணாகி ஊருணி போல் தேங்கி கிடக்கிறது.
இதுகுறித்து தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜாகீர் உசேன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் காவிரி கூட்டுக் குடிநீர் வீணாவதை தடுக்க முறையாக புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளால் ஆங்காங்கே தண்ணீர் வீணாகி வருகிறது. இதுதொடர்பாக புகார் செய்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story