மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி
தமிழக அனைத்து கட்சியினரை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார் என பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திருவாரூர்,
தமிழகத்தில் இந்து கோவில்களை பாதுகாப்பது குறித்து திருவாரூரில் இந்து கோவில் மீட்டு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இந்து சமய அறநிலையத்துறை அமைக்கப்பட்டது. திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழா அஸ்டம் நட்சத்திரத்தில் கொடி ஏறி, ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்திட வேண்டும் என்கிற ஐதீகத்தை கோவில் நிர்வாகம் மீறி வருகிறது. எனவே வருகிற 27-ந் தேதி ஆயில்யத்தில் ஆழித்தேரோட்டம் நடத்திட வேண்டும். இல்லையென்றால் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கோவில்கள் மோசமாக பராமரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 38 ஆயிரத்து 635 கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கோவில்கள் பராமரிப்பு இன்றி இடிந்து காணாமல் போய்விட்டது. கோவில் இருந்த இடம் ஓட்டல், வணிக வளாகமாக மாறியுள்ளது. பரம்பரை அறங்காவலர் இருந்த இடத்தில் தக்கார் என்ற பதவி தேவையற்றது. இந்து கோவில்களை அழிக்கும் நோக்கத்துடன்் அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்த திரிபுரா மாநிலத்தை பா.ஜனதா கட்சி கைப்பற்றி உள்ளது. எனவே கம்யூனிஸ்டுகள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் சிறப்பான செயல் திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து வருகின்றனர். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. தான். காவிரி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதும், தமிழகத்திற்கான நீர் பங்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதும் தி.மு.க. தான். பிரதமர் மோடி, தமிழகத்தின் அனைத்து கட்சியினரை சந்திக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. மறுப்பு தெரிவித்ததாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தின் மாணவர்கள் ரூ.2 ஆயிரத்திற்கு செம்மரம் வெட்ட செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. அனைத்து பகுதிகளிலும் வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வரும் நிலையில் கடந்த 50 ஆண்டு காலங்களில் தமிழக மாணவர்கள், இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பேட்டைசிவா, மாவட்ட பொதுச்செயலாளர் துரையரசு, ஒன்றிய தலைவர் செந்தில்அரசன், நகர தலைவர் சங்கர், இந்து முன்னணி நகர தலைவர் ஜெயராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story