நீதி நடவடிக்கைகளில் அரசின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பங்கேற்பு


நீதி நடவடிக்கைகளில் அரசின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பங்கேற்பு
x
தினத்தந்தி 5 March 2018 4:15 AM IST (Updated: 5 March 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

நீதி நடவடிக்கைளில் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டார்.

புதுச்சேரி,

சட்ட அமலாக்க அலுவலர்கள் மற்றும் நீதி நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றிய 2 நாள் தேசிய கருத்தரங்கு புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. புலத்தலைவர் பேராசிரியர் சிபநாத்தேப் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டார். அவர் பேசும்போது, நியாயமான தீர்ப்பு மற்றும் தரமான நீதி வழங்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், காவல்துறையின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, பல்வேறு துறைகளில் நாட்டின் முன்னோடியாக புதுச்சேரி உள்ளது. புதுவை பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது என்றார். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், இந்திய அரசின் சட்ட ஆணைய உறுப்பினர் நீதிபதி ரவி ஆர்.திரிபாதி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் பேசும்போது, நீதித்துறை மற்றும் காவல்துறை பற்றிய தவறான புரிதலை சமூகத்தில் மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் புதுவை பல்கலைக்கழக பதிவாளர் தரணிக்கரசு, சட்டக்கலை முனைவர் சுபலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story