ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2018 3:45 AM IST (Updated: 5 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

அம்மாப்பேட்டை புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாப்பேட்டை,

அம்மாப்பேட்டை புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த த.மணிமொழியன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ந.கிருஷ்ணகுமார், நெடுவாசல் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த மணியரசன், தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த சி.முருகேசன், தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த த.சு.கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெய்குன்னம், மருவத்தூர், பள்ளியூர், அம்மாப்பேட்டை பேரூராட்சி, கம்பர்நத்தம் ஆகிய பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்க இருக்கும் பணிகளை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story